எம். ஜி.ஆர் -யிடம் இருந்து நான் தான் உரிமையை வாங்கினேன்...கனவு நிறைவேறாதது குறித்து கமல் உருக்கம்..

Published : Sep 07, 2022, 11:09 AM IST
எம். ஜி.ஆர் -யிடம் இருந்து நான் தான் உரிமையை வாங்கினேன்...கனவு நிறைவேறாதது குறித்து கமல் உருக்கம்..

சுருக்கம்

பொன்னியின் செல்வன் விழாவில் பேசிய கமலஹாசன் தான் உருவாக்க வேண்டும் என பல வருடங்களாக கனவு கண்ட பொன்னியின் செல்வன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வனை படமாக்குவது என்பது சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரின் கனவாக இருந்தது. சோழ வம்ச அரசர்களின் வரலாற்று கதையான இதை படமாக்க முதலில் எம்ஜிஆர் தான் முயற்சி செய்தார். 1950 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் இந்த பிரம்மாண்ட முயற்சி தோல்வியை சந்திக்கவே இதனை அடுத்து உலகநாயகன் கமலஹாசன் இந்த நாவலை படமாக்க பெரும் முயற்சி செய்தார். ஆனால் பின்னர் அந்த முயற்சியும் பலிக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு....ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

பின்னர் 1990களில் இந்த படத்தின் உரிமையை பெற்ற மணிரத்தினம் 2010 முதல் முயற்சி செய்து தற்போது தான் இந்த படத்தை முழுவதுமாக முடித்துள்ளார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், சரத்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் குவிந்துள்ளது. அவர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.  பாடல்கள், டீசர், நேற்று வெளியான ட்ரெய்லர் என அனைத்தும் பெறும் வரவேற்பை வைத்து படம் கட்டாயம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்கிற நம்பிக்கையை உருவாகி விட்டது.

மேலும் செய்திகளுக்கு... நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி  என பான் இந்தியா மூவியாக உருவாகிய இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நேற்று நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்களின் பேச்சுக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய கமலஹாசன் தான் உருவாக்க வேண்டும் என பல வருடங்களாக கனவு கண்ட பொன்னியின் செல்வன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். மேடையில் பேசிய கமலஹாசன், கனவு படமான பொன்னியின் செல்வனின் உரிமையை எம்ஜிஆரிடமிருந்து  நான் பெற்றதாகவும் அப்போது அவர் என்னிடம் இந்த நாவலை சீக்கிரமாக படமாக எடுத்துவிடு என கூறினார். ஆனால் என்னால் முடியவில்லை இருந்தும் பலரிடம் அந்த உரிமை சென்றது கடைசிகள் வைராக்கியமாக இருந்து மணிரத்தினம் இதை படமாக்கி விட்டார் என பேசியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு... எதை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு... பொன்னியின்செல்வன் விழாவில் இயக்குனரை கலாய்த்த ரஜினிகாந்த்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்