நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

Published : Sep 07, 2022, 09:18 AM ISTUpdated : Sep 07, 2022, 10:35 AM IST
நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

சுருக்கம்

ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வனின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். மணிரத்தினம் - சூப்பர் ஸ்டார் கூட்டணியில் உருவான தளபதி வரலாற்று நட்பு நாடகமாக அமைந்து புதிய சாதனையை படித்திருந்தது. இதன் மூலம் கிடைத்த நட்பை புகழும் விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார், மணிரத்தினம் குறித்து புகழாரம் சூட்டி இருந்தார்.

முன்னதாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்கு மாஸாக  என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டாரை மணிரத்தினம் உள்ளிட்ட படக்குழுவினர் வரவேற்றனர் அப்போது முதலில் இயக்குனர் மணிரத்தினம் ரஜினிகாந்தை கட்டியணைத்து வரவேற்றார். அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற அங்கிருந்து வந்த த்ரிஷாவும் ரஜினியை கட்டி அணைத்தே வாழ்த்து பெற்றார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி  வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... எதை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு... பொன்னியின்செல்வன் விழாவில் இயக்குனரை கலாய்த்த ரஜினிகாந்த்

மேலும் செய்திகளுக்கு...முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. இயக்குநர் ஷங்கரின் புகழாரம்!

மணிரத்தினத்தின் பிரம்மாண்ட இயக்கமான பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான ஒவ்வொரு பாடல்களும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பாடல்களாக அமைந்து ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ஐஸ்வர்யாராய் பச்சன், த்ரிஷா என பல நட்சத்திரங்கள் குழுமியுள்ளனர். வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் குறித்த ஆர்வத்தை டீசர், பாடல்கள் மற்றும் நேற்று வெளியான ட்ரெய்லர் அதிகப்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு... அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், பார்த்திபன், ஷங்கர் என பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழு மற்றும் இயக்குனர் குறித்து பாராட்டி இருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?