
ரஜினிகாந்த் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் படமாக அமைந்த தளபதியை இன்றளவும் ரசிகர்கள் மறந்து இருக்க வாய்ப்பே கிடையாது. இயக்குனருக்கே உரித்தான மௌனம் பேசும் ஆக்ஷன் கதைகளை கொண்ட தளபதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நட்பு பாராட்டும் காட்சிகள் இன்றும் நட்பின் இலக்கணமாகவே இருந்து வருகிறது. அதோடு இந்த படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் மூன்று தலைமுறை கடந்தும் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணமே அமைந்துள்ளது. நட்பு, காதல் என இரண்டையும் சம அளவு கொடுத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாகவே அமைந்திருந்தது. இதை அடுத்து இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் அமையவே இல்லை.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இயக்குனர் குறித்து பேசியிருந்த சுவாரஸ்ய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது. கமலுடன் ஒரே மேடையில் தோன்றியிருந்த சூப்பர் ஸ்டார், 'தளபதி' படத்தில் தான் நடிக்கும் போது இயக்குனர் எந்த மாதிரி டைலாக் சொன்னாலும் மணிரத்னம் ஒத்துக்கவே யில்ல.. அந்த feel feel மிஸ் ஆகுதுனு சொல்லிட்டே இருப்பாரு.. நம்ம படத்துல எல்லாம் டைலாக் " ஏய் ஏட்றா வண்டிய " அப்டி தான் இருக்கும்.என கலகலப்பாக பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. இயக்குநர் ஷங்கரின் புகழாரம்!
அதேபோல உலகநாயகன் கமல்ஹாசன் பொன்னியின்செல்வன் வெற்றியடையும் என டான் வழிமொழிவதாக கைபேசி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். மணிரத்னம், கமல் கூட்டணியில் அமைந்த நாயகன் பிளாக் பாஸ்டர் கேங்ஸ்டார் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு... அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், என நம்ம ஊர் நாயகர் நாயகர்கள் சோழ வம்ச இளவரச இளவரசிகளாக வேடம் தரித்துள்ள பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரைக்காண உள்ளது. பான் படமாக உருவாகியுள்ள இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. கமலஹாசனின் அசத்தல் குரலில் வெளியான ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஷங்கர், பார்த்திபன் என பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு...கமலின் கம்பீரக் குரலில் பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன் வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.