அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

Published : Sep 07, 2022, 07:36 AM ISTUpdated : Sep 07, 2022, 10:28 AM IST
அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான  கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

சுருக்கம்

பதில் ட்வீட்  செய்து உள்ள சூர்யா வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!!எனக் கூறி கார்த்தியை செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் வாரிசு என்கிற பெயருடன் அறிமுகமான சூர்யா இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தையே உருவாக்கி விட்டார். இவருடைய சாம்ராஜ்யத்தில் சூர்யா தான் ராஜா. முதலில் பிரபல நடிகர்களுடன் துணை நடிகராக அறிமுகமான இவர் ரொமாண்டிக் ஹீரோவாகவே பார்க்கப்பட்டார். ஆனால் பாலாவின் நந்தா சூர்யாவிற்கு இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தது. பாலவுடன் பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல.  நாயகனை அவர்களது பாணியிலிருந்து முழுவதுமாய் தலைகீழாக மாற்றி விடுவார் இந்த இயக்குனர். அதுவரை சாக்லேட் பாயாக தோன்றிய சூர்யா திடீரென முரட்டு ஆசாமியாக மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இதை தொடர்ந்து இவர் நடித்த பிதாமகன் ரசிகர்கள் மத்தியில் இவரது மிகுந்த வரவேற்பை கொடுத்தது. பின்னர் வித்யாசமான கதாபாத்திரங்களில் நுழைந்த சூர்யாவிற்கு ஆக்சன் ரோல்கள் அதிகம் கை கொடுக்க காக்க காக்க, ஆறு, கஜினி , சிங்கம் என தொடர்ந்து வெற்றி படங்களாகவே அமைந்தது. 

மேலும் செய்திகளுக்கு...கமலின் கம்பீரக் குரலில் பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன் வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்

சமீபத்தில் சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் கொண்டு சேர்த்தது. அதோடு சமூக கருத்துக்களையும் மையமாகக் கொண்டிருக்கும் சூர்யாவின் படம் என்கிற ஒரு நம்பிக்கையும் பெற்று விட்டார் இவர். தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான்,  வாடிவாசல் என இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு விக்ரம், ராக்கேட்ரி, இந்தி ரீமேக் சூரரை போற்று என பல படங்களில் சிறப்பு தரிசனமும் செய்து வருகிறார். இதில் விக்ரம் ரோலக்ஸ் நின்று பேசியாக கதாபாத்திரமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... காதல் கிசுகிசுக்கு மத்தியில்... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ஜோடியாக வந்த சித்தார்த் - அதிதி ராவ்

மேலும்  வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்காக இரண்டு காளைகளை வாங்கி அவற்றுடன் பழகிக் கொண்டிருக்கிறார் நாயகன். இவ்வாறு  தான் நடிக்கும் ரோலுக்கு ஏற்ப தன்னை முழுதுமாய் அற்பணித்து கொள்ளும் நாயகன் சூர்யா தற்போது சினிமாவில் நுழைந்து 25 ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளார். 

இவர் சினிமாவுடன் நிறுத்தி விடாமல் சமூகத்திலும் நாயகனாகவே சேவை செய்து வருகிறார். அந்த வகையில் அகறம் பவுண்டேஷனை நிறுவி அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி முதல் பல உதவிகளை செய்து சமூகத்தில் நன்மனிதனாய்  வாழ்ந்து வரும் இவருக்கு உறுதுணையாய்  இருக்கிறார். இவரும் மனைவி ஜோதிகா.

இந்தி தெரியாதுன்றத இந்தியிலேயே சொன்ன பார்த்திபன் - கைதட்டி சிரித்த கமல் - ரஜினி

தற்போது சூர்யா சினிமா உலகில் நுழைந்து 25வது ஆண்டை ஒட்டி, அவரது தம்பி கார்த்தி சூர்யாவிற்கு புகழாரம் சுட்டும் வகையில் ட்வீட் செய்துள்ளார் அதில், அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அது என் அண்ணன்! என குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதற்கு பதில் ட்வீட்  செய்து உள்ள சூர்யா வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!!எனக் கூறி கார்த்தியை செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?