இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Sep 6, 2022, 9:51 PM IST

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில்... இயக்குனர் மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் இதய பூர்வமாக செய்த செயலின் வீடியோ தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


இயக்குனர் மணிரத்னம் பார்த்து பார்த்து ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிலை போல் வடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து பிரபலங்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  மற்றும் கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ச்சீ... ச்சீ... அதுக்குன்னு இவ்வளவு மோசமா? போட்டிருக்கும் பேன்ட்டை அவிழ்த்து உள்ளாடையை காட்டிய சிம்பு பட நாயகி
 

மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத இவர், இசை வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக, மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர்போர்ட் வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

உலக அழகி பட்டத்தை சூடிய பின்னர், ஐஸ்வர்யா ராய்க்கு முதல் முதலில் பட வாய்ப்பு கொடுத்து... திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம் தான். எனவே ஐஸ்வர்யா ராய் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டாலே... ஐஸ்வர்யா ராய் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லி விடுவார் என்று கூறப்படுகிறது.  காரணம் ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்னம் மீது வைத்துள்ள குரு மரியாதை தான்.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!
 

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய்... இயக்குனர் மணிரத்னத்தை கண்டதுமே,  கட்டி பிடித்து தன்னுடைய அன்பை பரிமாறி கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலர் இது தான் குரு மரியாதை என்பார்கள் என, தங்களுடைய  கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

The way she ran to her Mentor and that wholesome hug to her Guru. Respect 😇

AISH u stole my ❤️ pic.twitter.com/O8XGdm8OVH

— Kat_yayani💫 (@Kat_yayani0098)

 

click me!