நடிகர் அஜித் பிஆர்ஓ-வின் உதவியாளரை அறைந்த பவுன்சர்கள்... பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு

Published : Sep 06, 2022, 08:25 PM ISTUpdated : Sep 06, 2022, 08:36 PM IST
நடிகர் அஜித் பிஆர்ஓ-வின் உதவியாளரை அறைந்த பவுன்சர்கள்... பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு

சுருக்கம்

நடிகர் அஜித்தின் உதவியாளரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திராவின் உதவியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியதால், கோபமடைந்த செய்தியாளர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் நடித்த கலைஞர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்து உள்ளனர்.

இந்த விழாவிற்கு பொதுமக்கள் வந்து இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதால் அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான திரைப்பிரபலங்கள் வருகை தந்துள்ளதால், ஒரு பக்கம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும், மறுபுறம் பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். 

இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

                                                     

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழாவில் பிஆர்ஓ உதவியாளர் விக்கி என்பவரை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

                                                    

நடிகர் அஜித்தின் உதவியாளரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திராவின் உதவியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியதால், கோபமடைந்த செய்தியாளர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!