சிறந்த மனிதநேய விருதை பெற்ற பிரபல நடிகர் சௌந்தரராஜா!

Published : Sep 06, 2022, 07:38 PM IST
சிறந்த மனிதநேய விருதை பெற்ற பிரபல நடிகர் சௌந்தரராஜா!

சுருக்கம்

நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.    

தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சௌந்தர்ராஜனுக்கு தற்போது Take Care International Foundation என்ற அமைப்பு, விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் , மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து "Pride of Humanity" என்கிற விருதை வழங்கி வருகிறது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!
 

அந்த வகையில் தமிழகம் முழுவதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, மற்றும் நிகழ்ச்சியாளராகள் பலர் கலந்து கொண்டனர். விருதை பெற்ற பின்னர், பேசிய நடிகர் சௌந்தரராஜா, மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும், இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்வதாக கூறினார்.

மேலும் செய்திகள்: களைகட்டிய புகழ் - பென்சியா திருமண வரவேற்பு..! பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து... வைரலாகும் போட்டோஸ்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!