
ஊடகம் முழுக்க பொன்னியின் செல்வன் பேச்சு தான். நேற்று நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களில் மேடை பேச்சுக்களும் அவர்களின் பர்ஃபார்மன்ஸும் தான் சோசியல் மீடியா முழுவதும் நிறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று மேடையில் இசைக்கப்பட்ட பாடல் ஒன்றுக்கு இருக்கையில் அமர்ந்தபடி திரிஷாவும், சித்தார்த்தும் போட்ட ஆட்டம் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக மணிரத்தினத்தின் இயக்கத்தில் சித்தார்த்தும் த்ரிஷாவும் நடித்த ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல் தான் மேடையில் இசைக்கப்பட்டது. இந்த பாடலுக்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். பாடல் மேடையில் இசைக்கப்பட்ட உடன் பழைய நினைவுகளுக்கு திரும்பிய த்ரிஷா மற்றும் சித்தார்த் பாடலுக்கேற்றவாறு இருக்கையில் அமர்ந்தபடி போட்ட ஆட்டம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...மஹாலட்சுமிகாக ரவீந்திரன் கட்டிய மஹால்... எத்தனை லட்சத்தில் தெரியுமா?
மேலும் செய்திகளுக்கு...மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.
வரும் 30ஆம் தேதி திரைக்கான உள்ள பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக ஐந்து ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இதன் உரிமையை பெற்ற இயக்குனர் மணிரத்தினம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதை படமாக்கியுள்ளார். நேற்று வெளியான படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.