Jai Bhim: 'ஜெய் பீம்' குரலற்றவர்களுக்கான குரல்... இயக்குனர் ஷங்கரின் பாராட்டு மழையில் சூர்யா!

Published : Dec 11, 2021, 12:35 PM IST
Jai Bhim: 'ஜெய் பீம்' குரலற்றவர்களுக்கான குரல்... இயக்குனர் ஷங்கரின் பாராட்டு மழையில் சூர்யா!

சுருக்கம்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ஷங்கர், சூர்யா, இயக்குனரை வெகுவாக பாராட்டி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.  

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ஷங்கர், சூர்யா, இயக்குனரை வெகுவாக பாராட்டி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,  சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான ஜெய் பீம் படம்  ஓடிடி இணையதளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. அதே அளவுக்கு  சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. 'ஜெய் பீம்' படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் அக்னி கலசம் இடம்பெற்றிருந்ததும் தான்இந்த சர்ச்சைக்கு பொறியாக அமைந்து கொழுந்து விட்டு எரிய காரணம்.

மேலும் செய்திகள்: BiggBoss5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இரண்டு எலிமினேஷன்! வெளியேற போவது யார் யார்? கார்த்திருக்கிறதா ட்விஸ்ட்

 

தங்களது சமூகத்தை மோசமாக சித்தரித்து காட்டுவதாக, வன்னியர்சங்கங்களும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் பிரச்சனைகள் ஓயவில்லை.

மேலும் செய்திகள்: Pooja Hegde: கருப்பு சேலையில்.. கட்டற்ற கவர்ச்சியை அவிழ்த்துவிட்டு பூஜா ஹெக்டே! சுழட்டி போட்ட போட்டோஸ்!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேலும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே போல், சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: Samantha: லோ நெக் ஜாக்கெட்.. குட்டை பாவாடை.. தர லோக்கலுக்கு இறங்கி ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா!

 

இப்படி பிரச்சனைகள் எண்டு கார்டு போடாமல் ஒரு பக்கம் போய் கொண்டிருந்தாலும், மற்றொருபுறம்... இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு மழைக்கும் குறைவில்லை. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த, இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷங்கர்... 'ஜெய்பீம்' படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்: Sridevi Vijayakumar: குழந்தை பெற்ற பிறகும் ஹீரோயின் லுக்கில்... சிற்றிடையை காட்டி உருக வைத்த ஸ்ரீதேவி!

 

இதுகுறித்து இவர் போட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது... "ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரல். இயக்குனரின் விவரமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறை நரம்பைத் தூண்டும் வகையில் உள்ளது பாராட்டுக்குரியது. தன்னுடைய நடிப்பு தாண்டி, சூர்யா சமூகத்தின் மீது கொண்டுள்ள கருணை உண்மையில் பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்