Arya Birthday Special :ஆர்யாவின் பிறந்தநாளில் இமான் வெளியிட்டுள்ள போஸ்டர்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 11, 2021, 11:55 AM IST
Arya Birthday Special :ஆர்யாவின் பிறந்தநாளில் இமான் வெளியிட்டுள்ள போஸ்டர்!!

சுருக்கம்

Arya Birthday Special : ஆர்யாவின் பிறந்தநாளான இன்று இசையமைப்பாளர் டீ.இமான்" கேப்டன் போஸ்டருடன் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2005 -ம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், ,மகாமுனி, காப்பான், டெட்டி, சர்பேட்டா பாரம்பரை, அரண்மனை 3, எனிமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வெட்டி இளைஞராக நடித்ததும் சரி நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்ததும் சரி தனக்கென தனி பாணியில் முழு அற்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா.

இவர் கடந்த 2019 -ம் ஆண்டு நடித்திருந்த மகாமுனி படத்தை  மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமான சாந்தகுமார் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது ரீஎண்ட்ரியாக இதனை  இயக்கியிருந்தார். இதில் ஆர்யாவுடன், இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோரின் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

இந்த படத்திற்கு இந்த படத்தில் தனது ஆக்கபூர்வமான நடிப்பை வெளிப்டுத்தியிருந்த ஆர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.  15வது ஆண்டு அயோத்தி திரைப்பட விழாவின் ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை  பெற்றுள்ளார். 
இதற்கிடையே விஷால் - ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்தில் ஆர்யா சாணக்கிய தானம் கொண்ட எதிர் நாயகனாக நடித்து தனது அற்புத ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். முன்னதாக . 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை சாயிஷாவை கடந்த 2019 -ம் ஆண்டு ஆர்யா திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்தது கடைசியாக டெட்டி படத்தில் இணைந்தது நடித்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் இருவரும் அழகிய பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆனார்கள்.

நடிகர் ஆர்யா தற்போது கேப்டன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்குகிறார்.  ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 இப்படத்தில் சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதன் இசையமைப்பு பணியை இமான் உருவாக்கி வருகிறார். கேப்டன் படத்தின் முதல் பார்வை போஸ்டரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டிருந்தது.

ஆர்யாவின் பிறந்தநாளான இன்று இசையமைப்பாளர் டீ.இமான்" கேப்டன் போஸ்டருடன் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு கேரளாவில் இதே நாளில் ( டிசம்பர் 11) பிறந்த ஆர்யாவிற்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ஜம்ஷத் சேதிராகத் என்பதாகும்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!