Hari Father Death: பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்..! கண்ணீரில் மூழ்கிய விஜயகுமார் குடும்பம்..!

Published : Oct 21, 2023, 11:29 AM ISTUpdated : Oct 21, 2023, 11:33 AM IST
Hari Father Death: பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்..! கண்ணீரில் மூழ்கிய விஜயகுமார் குடும்பம்..!

சுருக்கம்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் சம்மந்தியும், இயக்குனருமான ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.   

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ஹரி, காமர்ஸில் பட்ட படிப்பு படித்திருந்தாலும் திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக, தூத்துக்குடியில் இருந்து வந்து இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர் ஜான், நாசர் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர், நடிகர் பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு விக்ரம் - திரிஷா நடிப்பில், ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் சீரிஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தன. பொதுவாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கிராமத்து சாயல் இருக்கும். இது இவரின் தனி சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

Thalapathy 68: வேற லெவல் அப்டேட்... மிரட்டல் நாயகனை ஸ்கெச் போட்டு தளபதி 68 படத்தில் களமிறங்கிய வெங்கட் பிரபு!

கடைசியாக தன்னுடைய மச்சினன் அருண் விஜயை வைத்து 'யானை' படத்தை இயக்கிய ஹரி, தற்போது விஷாலின் 34-ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் தந்தை வி ஆர் கோபாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக தன்னுடைய 88 வயதில் காலமான சம்பவம், ஹரி - ப்ரீத்தா விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தூத்துக்குடியில் மளிகை கடை நடத்தி வந்த இவர், தன்னுடைய மகன் முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்த பின்னர் சென்னைக்கு வந்து தன்னுடைய மகன் - மருமகளுடன் வசித்து வந்தார்.

Leo Day 2 Box Office: இரண்டாவது நாளில் 44% சரிவை கண்ட லியோ பட வசூல்..! இருப்பினும் மாஸ் காட்டிய தளபதி!

தற்போது இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என்றும், இதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை... இறுதி சடங்குகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!