'த்ரிஷ்யம் 3 ' உருவாகுமா? தயாரிப்பாளரை பளீச் பதில்..!

Published : Feb 22, 2021, 04:11 PM IST
'த்ரிஷ்யம் 3 ' உருவாகுமா? தயாரிப்பாளரை பளீச் பதில்..!

சுருக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான 'த்ரிஷ்யம் 2 ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விகள் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார்.  

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான 'த்ரிஷ்யம் 2 ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விகள் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் பட ஜோடிக்கு திருமணம்..! நடிகை கொண்டாடிய பேச்சிலர் பார்ட்டி போட்டோஸ்!
 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா, நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரைப்படம் 'த்ரிஷ்யம்'. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது. மலையாளத்தை தொடர்ந்து, தமிழில் நடிகர் கமலஹாசன், கவுதமி, நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

மேலும் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள 'த்ரிஷ்யம் 2 ' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து,  தயாரிப்பாளர்கள் இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 'இனி இந்த குடும்பம் என்னுடையது'..! 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்! குவியும் வாழ்த்து...
 

ஏற்கனவே தெலுங்கில் த்ரிஷ்யம் 2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,  இயக்குனர் ஜீத்து ஜோசப்பை சந்தித்து பேசியபோது அவருக்கு த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: குழந்தை பெற்ற பின்பும் ஹீரோயின் போல் இருக்கும் 'இதயதிருடன்' நடிகை! 15 வருடத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி!
 

எனவே த்ரிஷ்யம் 3  குறித்த அறிவிப்பு கூடிய விரைவிலோ... அல்லது இன்னும் சில வருடங்களுக்கு பிறகு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!