தனுஷுக்கே இது ஏமாற்றம்..! ஓடிடியில் ரிலீஸ் ஆகும் 'ஜகமே தந்திரம்'..! டீசர் இதோ..!

Published : Feb 22, 2021, 02:07 PM IST
தனுஷுக்கே இது ஏமாற்றம்..! ஓடிடியில் ரிலீஸ் ஆகும் 'ஜகமே தந்திரம்'..! டீசர் இதோ..!

சுருக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்து, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.  

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்து, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர்! இந்த நடிகையின் கணவரா?
 

மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் நிறைவடைந்த போதும், இடையில் வந்த கொரோனா பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. 

பொங்கல் விருந்தாக 'மாஸ்டர்' திரைப்படம் வெளியான பிறகு படத்தை தியேட்டரில் இறங்கலாம் என படக்குழு முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் 'ஜகமே தந்திரம்' கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதியாக கூறி வந்தார். 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
 

இதனிடையே ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியானது. கொரோனா பிரச்சனைகள் எல்லாம் மெல்ல விலகி, இம்மாதம் முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி எல்லாம் செய்வார்களா? என தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில தினங்களுக்கு முன்பு  கூட ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், என் ரசிகர்களைப் போல் ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்” Finger Crossed என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்: குழந்தை பெற்ற பின்பும் ஹீரோயின் போல் இருக்கும் 'இதயதிருடன்' நடிகை! 15 வருடத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி!
 

இதிலும் உறுதியாக தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் குறிப்பிடாததால் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது, நெட்பிலிக்ஸ் தளத்தில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசரை வெளியிட்டு, விரையில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, தனுஷுக்கே மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் டீசர் இதோ...  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்