Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

Published : Aug 18, 2022, 08:34 AM ISTUpdated : Aug 18, 2022, 10:57 AM IST
Thiruchitrambalam twitter review :  நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

சுருக்கம்

Thiruchitrambalam twitter review : இன்று திருச்சிற்றம்பலம்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்.

அடுத்து அடுத்து தனுஷின் மூன்று படங்கள் ஓடியில் வெளியான நிலையில் இரண்டு வருட இடைவெளியானதால்  டி -யை  திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதோடு தங்க மகனுக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது. முதல் சிங்குளாக தாய்க்கிழவி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இப்படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா பிரியா, பவானிசாகர் என மூன்று நாயகிகள் இருப்பதும் மேலும் சுவாரஸ்யத்தை ஈர்க்க,  மேலும் சிறப்பாக இயக்குனர் பாரதிராஜா தனுஷின் தாத்தாவாகவும் பிரகாஷ்ராஜ் தனுஷின் தந்தையாகவும் நடித்திருந்தது. இந்தப் படத்தை முந்தைய ஹிட் படமான 'யாரடி நீ மோகினி' படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். 12 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி அமைந்துள்ளது. இதனாலும் படம் குறித்த அதிக கண்ணோட்டம் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...போட்டோ போதாதென நீச்சல் உடை வீடியோவையும் வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா..

தனுஷ் நடித்த பழம் மற்றும் நித்யா மேனன் நடித்த ஷோபனா இடையே உறவு புதுமையாக பார்ப்பவர்களை  ஈர்க்கக் கூடியதாக உள்ளது.  அதோடு இந்த மூன்று நாயகிகளில் தனுஷ் யாருடன் ஜோடி சேர்வார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பிரியா பவானி சங்கர் தனது தனித்துவமான ஆளுமையை இங்கே கொண்டுவந்துள்ளார். அவர் திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறார்.  ரஞ்சனி ஒரு கதாபத்திரமாக நம்மை கவர்கிறார். ராசி கண்ணா தனுஷிடம் ஒரு பளபளப்பான கெமிஸ்ட்ரியை கொண்டுவந்துள்ளார். அனுஷாவின் சித்தரிப்பு பார்வையாளர்களை அவர் மீது காதல் கொள்ள வைக்கிறது. திருச்சிற்றம்பலத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார்.  சன் பிக்சர்ஸ் பேனரில் கீழ் திருச்சிற்றம்பலம் படத்தை கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

இந்நிலையில் இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்...

 

மேலும் செய்திகளுக்கு...54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை! 

 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்