தனுஷ் ரசிகர்களின் திடீர் போஸ்டரால் பரபரப்பு..! ஏற்கப்படுமா கோரிக்கை?

Published : Feb 06, 2021, 04:06 PM IST
தனுஷ் ரசிகர்களின் திடீர் போஸ்டரால் பரபரப்பு..! ஏற்கப்படுமா கோரிக்கை?

சுருக்கம்

'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

பல மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் நிறைவடைந்த போதும், இடையில் வந்த கொரோனா பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு படத்தை தியேட்டரில் இறங்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. அதேபோல் மாஸ்டர் திரைப்படத்திற்கும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஜகமே தந்திரம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதியாக கூறிவந்தார். 

மேலும் செய்திகள்: தளபதி விஜய் பட நாயகியின் சொகுசு வீட்டை வாங்கிய பிரபல நடிகை..! இத்தனை கோடியா..?
 

இதனிடையே ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியானது. கொரோனா பிரச்சனைகள் எல்லாம் மெல்ல விலகி, இம்மாதம் முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி எல்லாம் செய்வார்களா? என தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

மேலும் செய்திகள்: அஜித் வாங்கிய 6 லட்சம் கடன்..? எதற்காக... பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தயாரிப்பாளர்..!
 

மேலும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவே தான் விரும்புவதாக தனுஷும் சமீபத்தில் டுவிட் செய்திருந்தார். இதனால் தயாரிப்பு தரப்பிற்கும் தனுஷுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. தற்போது ’ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளருக்கு தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையா பாடுவாரா? வைரலாகும் வீடியோ..!
 

தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரான தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி