ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நகைகள்... சித்ரா தற்கொலை வழக்கில் வெளிவருமா பகீர் உண்மைகள்..?

By manimegalai aFirst Published Feb 6, 2021, 10:36 AM IST
Highlights

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சித்ராவின் நகைகள், ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சித்ராவின் நகைகள், ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் டிசம்பர் 9 ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவது நாம் அறிந்ததே. 

இவரை தற்கொலைக்கு தூண்டியதாக, சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 14-ம் ஹேம்நாத், சித்ராவிற்கும் தனக்கும் எந்த பிரச்னையும் நடக்கவில்லை. அவரது தற்கொலைக்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என கூறி,   ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதையும், சித்ரா தூக்கு போட்டு தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சித்ராவின் தொலைப்பேசி உரையாடல்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு முடிவுகள் பிப்ரவரி 10 ஆம் தேதி, வந்துவிடும் என நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கை நீதிபதி பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!