
தனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக மாடலிங், வெப் தொடர்களில் நடித்துவந்தார். கடந்த புதன் கிழமை ஷூட்டிங்கி இல்லாத போதும், படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற ஸ்ரீவத்சவ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் தேடியதில் அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ஸ்ரீவத்சவ்.
அந்த வீடு பிசினஸ் மேனான ஸ்ரீவத்சவ்வின் தந்தை அவருடைய பிசினஸிற்காக பயன்படுத்தி வந்தது என்பதும், அதில் கடந்த 3ம் தேதியே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மறுநாளான 4ம் தேதி தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்ற கொடூரமும் வெளியாகியுள்ளது.
இன்று ஸ்ரீவத்சவ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இல்லாதது இருப்பதுபோலத்தோன்றும் 'Hallucination' பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் நடிகராக திரைவானில் சிறகு விரிக்க ஆரம்பித்த ஸ்ரீவத்சவ்வின் திடீர் மரணத்தால் மனமுடைந்த திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.