கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையா பாடுவாரா? வைரலாகும் வீடியோ..!

Published : Feb 06, 2021, 01:50 PM IST
கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையா பாடுவாரா? வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என செம்ம பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவர் பிரபல இசையமைப்பாளருடன் இருக்கும் போது பாடிய பாடலின் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

தமிழ், தெலுங்கு, மலையாளம் என செம்ம பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவர் பிரபல இசையமைப்பாளருடன் இருக்கும் போது பாடிய பாடலின் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பை தாண்டி, ஃபேஷன் டிசைனிங், வயலின், நடனம் என அனைத்திலும் மாஸ் காட்டி வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து முதல் முறையாக நடித்து வரும் 'அண்ணாத்த'  படப்பிடிப்பு தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு சில மாதங்களில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், செல்வராகவனுடன் நடிக்கும் 'சாணிக்காகிதம்' படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படத்தை கீர்த்தி வெளியிட்டார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது  நான்கு தெலுங்கு படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ், நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்து வரும் ‘ராங்டே' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ஒரு பாடலை தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளார். 

இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்  தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் கீர்த்தி அருமையாக நடிப்பதை போல்... பாடலையும் அதைவிட அருமையாக பாடுகிறார் என இவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !