
லேசா லேசா படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த திரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆன போதிலும் குறையாத அழகுடன் மிளிர்கிறார்.
நடிகை திரிஷா கைவசம் கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி என அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்களின் ஷுட்டிங் முடிந்த போதிலும் சில சிக்கல்களால் ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது. விரைவில் அப்படங்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை திரிஷா அண்மையில் தி ரோட் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார். கடந்த 2000-ம் ஆண்டு அரங்கேறிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை திரிஷாவின் பிறந்தநாளான இன்று தி ரோட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக ஷபீர் நடித்து வருகிறார். இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஆவார். மேலும் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...Shah Rukh khan :‘மாஸ்டர்’ விஜய் பாணியில் ரசிகர்களுடன் மாஸாக செல்பி எடுத்த ஷாருக்கான் - வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.