பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், அவருடைய வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், அவருடைய வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா? கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை!
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தற்போது மகாராஷ்டிரா மாநிலம் திகழ்ந்து வருகிறது. இம்மாநிலத்தில் மட்டும் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும், பழம்பெரும் பாலிவுட் நடிகர் கிரண்குமார் என்பவரும் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திடீர் என மூச்சு திணறலோடு, உடல்நல பிரச்சனையினாலும் பாதிப்பட்ட இவரை இவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர் . இவருடைய ரத்த பரிசோதனையில் கிரண்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: புற்றுநோயால் நேர்ந்த சோகம்! 26 வயதே... ஆன இளம் நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!
இதை தொடர்ந்து, இவரை அவருடைய வீட்டிலேயே தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதே போல் இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கும் உரிய பரிசோதனை செய்யப்பட்டு தனிமையில் வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்: நடிகருடன் காதல் திருமணம்... கள்ளக்காதல் பிரச்சனை! 4வது முறையாக பெயரை மாற்றி தமிழில் கவனம் செலுத்தும் நடிகை!
கடந்த ஓரிரு தினத்திற்கு முன் தான், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் வேலை செய்து வரும், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தனிமை படுத்தப்பட்ட நிலையில், மற்றொரு பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.