புற்றுநோயால் நேர்ந்த சோகம்! 26 வயதே... ஆன இளம் நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

By manimegalai a  |  First Published May 24, 2020, 3:00 PM IST

26 வயதே ஆகும் இளம் நடிகர் ஒருவர், புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ள சம்பவர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 


26 வயதே ஆகும் இளம் நடிகர் ஒருவர், புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ள சம்பவர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து, தன்னுடைய  காமெடி பேச்சாலும், நடிப்பாலும் பல பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் மோஹித் பாகெல். உத்தர பிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்த இவர், நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ரெடி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் புற்று நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக இவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

தன்னுடைய சொந்த ஊரான மதுராவில், வீட்டில் இருந்த இவருக்கு திடீர் என உடல் நலம் மோசமாகியுள்ளது. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் ஆவதற்கு முன், இவருடைய உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவருக்கு பலர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இவர் பற்றி பிரபல எழுத்தாளர் கூறியபோது, இவருடைய படங்களில், காமெடி மிகவும் அருமையாக இருந்ததால், அவரை தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் போனில் பேசியதாகவும், அப்போது நலமாக இருக்கிறேன் என்று கூறிய இவர் தற்போது இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இவர் இறந்த செய்தி கூட அவருடைய நண்பர்கள் மூலமாகவே தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!