'குக் வித் கோமாளி' புகழுக்கு அடித்த ஜாக்பாட்! உண்மையிலேயே வேற லெவல் தான்!

Published : Mar 19, 2021, 06:34 PM IST
'குக் வித் கோமாளி' புகழுக்கு அடித்த ஜாக்பாட்! உண்மையிலேயே வேற லெவல் தான்!

சுருக்கம்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான, புகழுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவது நாம் அறிந்தது தான்.  இவர் ஏற்கனவே சந்தானம், விஜய், அருண்விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாக இவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான, புகழுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவது நாம் அறிந்தது தான்.  இவர் ஏற்கனவே சந்தானம், விஜய், அருண்விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாக இவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: இதுக்கு ஏன் அந்த சட்டையை வேற போட்டுக்கிட்டு..? கழட்டிட்டே போஸ் கொடுத்திருக்கலாம்! மிரள வைத்த அமலாபால் !
 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து பிரபலங்களுக்குமே தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கி விட்டது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ள பிரபலங்கள் சிலர் போட்டி போடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை எடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது. கன்னடத்தில் 'குக் வித் கிறுக்கு' என்கிற பெயரின் விரைவில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது.   

தமிழில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, ஷகீலா, ஆகியோர் தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும், புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா, உள்ளிட்டோருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்: ‘சிரிப்பே சிதறவைக்குதே’... பளீச் புன்னகையுடன் பிரியா பவானி ஷங்கர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!
 

குறிப்பாக புகழ் ஏற்கனவே சுமார் நான்கு படங்களுக்கு மேல் நடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்  கடந்த 2 தினங்களுக்கு முன், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

மேலும் செய்திகள்: 'சந்தரமுகி 2 ' படத்தின் கதை இதுவா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
 

தற்போது இந்த படத்தில் புகழ்  மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் தொடர்ந்து நடித்து வரும் புகழ், தற்போது விஜய் சேதுபதியின் படத்திலும் நடிக்க உள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!