செல்வராகவன் மீது காதல் வர இது தான் காரணம்! 10 வருடத்திற்கு பின் உண்மையை போட்டுடைத்த மனைவி!

Published : Mar 19, 2021, 04:55 PM ISTUpdated : Mar 19, 2021, 05:07 PM IST
செல்வராகவன் மீது காதல் வர இது தான் காரணம்! 10 வருடத்திற்கு பின் உண்மையை போட்டுடைத்த மனைவி!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர், செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் மீது காதல் எப்படி வந்தது? என்பது குறித்த தகவலை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்டுள்ளார்.  

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர், செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் மீது காதல் எப்படி வந்தது? என்பது குறித்த தகவலை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சகோதரர் தனுஷை வைத்து இயக்கி கடந்த 2002 ஆம்  ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து,  'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'இரண்டாம் உலகம்' போன்ற பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் தன்னுடைய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர்,  தன்னுடைய துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். தற்போது இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் தான் இவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. அவ்வபோது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தனது கணவரை எடுத்த பேட்டி ஒன்றை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதிய கதையை படித்து தான் அவர் மீது காதல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

'கானல் நீர்' என்கிற பேண்டஸி கதை தான் அது என்றும், அந்த கதைதான் பின்னால் பின்னர் 'இரண்டாம் உலகம்' என்ற திரைப்படமாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார் கீதாஞ்சலி. முதன்முதலாக செல்வராகவனின் கதையை படித்த பின்பு தான் காதலில் விழுந்தார் கீதாஞ்சலி என்கிற தகவல் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!