Latest Videos

Second Single : "சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ".. மெலடி பாடும் தளபதி.. மயக்கும் பவதாரிணி - GOAT அப்டேட் இதோ!

By Ansgar RFirst Published Jun 21, 2024, 6:58 PM IST
Highlights

GOAT Second Single : GOAT திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் முன்னோட்டம் இப்பொது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது 68வது திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து "விசில் போடு" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் நாளை (ஜூன் 22) தளபதியின் ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு "சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதே" என்கின்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை தளபதி விஜய் அவர்களோடு இணைந்து, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பாடகி பவதாரணியை பாட வைத்துள்ளார்கள் பட குழுவினர். 

Poornima : விலகும் சேலை.. ரம்யா ஸ்டைலில் நச் போஸ்.. கவர்ச்சியை கிக் ஸ்டார்ட் செய்த பூர்ணிமா ரவி - Hot Pics!

தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பாடலாக இது அமையும் என்று இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். மறைந்த பாடகி பாவதாரிணியின் அண்ணன் தான் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் AI தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களை நடிக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகர், நடிகைகள் பிரசாந்த், பிரபுதேவா லைலா மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நிலையில், சினேகா மற்றும் மீனாட்சி சவுதிரி ஆகிய இருவரும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

Here is a chinna promo of a song with a big heart ♥️

Vocal by sir & 🎤

A magical 🎼
A lyrical ✍🏼
A Hero … pic.twitter.com/IxkiYuM3g1

— T-Series South (@tseriessouth)

இந்நிலையில் சினேகா மற்றும் தளபதி விஜய் இணைந்து பாடுவது போல அமைந்த இந்த பாடலான "சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதே" என்கின்ற பாடல், நாளை மாலை 6 மணிக்கு தளபதியின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கப்பட உள்ளது. மேலும் நாளை GOAT படத்தின் டீசர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அல்லு அர்ஜுனுக்கு கணவருடன் சென்று திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி! கிஃப் கொடுத்து அசத்திய ஐகான் ஸ்டார்!

click me!