'கர்ணன்' பட பாடல் சர்ச்சை... நடிகர் தனுஷ், இயக்குனர், தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

By manimegalai aFirst Published Mar 23, 2021, 12:28 PM IST
Highlights

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற 'பண்டாரத்தின் புராணம்' பாடலில் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவது போல் சில வரிகள் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் நடிகர் தனுஷ், இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற 'பண்டாரத்தின் புராணம்' பாடலில் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவது போல் சில வரிகள் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் நடிகர் தனுஷ், இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் சேர்ந்த பிரபு என்பவர் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி, இயக்குனர் மாரி செல்வன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரித்துள்ள திரைப்படமான 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் , மற்றும் நாட்டுப்புற பாடகி மாரியம்மாள் பாடிய 'கண்டா வரச்சொல்லுங்க' எனும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் ஊடகத்தில் வெளியானது.

மேலும் செய்திகள்: 'தலைவி' ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா..! ட்ரைலர் வெளியானது..!
 

அதேபோல், சமீபத்தில் 'பண்டாரத்தி புராணம்' எனும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியானது. இந்த பாடலில் 'பண்டாரத்தி என் சக்காளத்தி' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சமூகத்தை குறிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் கோயில்களில் மற்றும் மாலை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை காயப்படுத்தும் விதமாக 'கர்ணன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பண்டாரத்தின் புராணம்' பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்: ஷகிலாவின் திருநங்கை மகள்... இந்த சீரியல் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!
 

எனவே கர்ணன் படத்தின் பண்டாரத்தின் புராணம், பாடல்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து, படத்திற்கு இடைக்கால  தடை விதிக்க கோரியும் தன்னுடைய மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 9 ஆம் தேதி, 'கர்ணன்' படம் வெளியாக உள்ள நிலையில், இந்த புதிய சிக்கல் வந்துள்ளது. எனவே சர்ச்சைக்குரிய 'பண்டாரத்தி' பாடல் நீக்க படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!