
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திமுக சார்பில் கார்த்திகேய சேனாபதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகானும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் பாணியில் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், “நான் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடுவதாக பலரும் பேசுகிறார்கள். தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதிலாக போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து விட்டேன். எனவே, வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன். இந்த முடிவு மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான நேற்றைய தினம், மன்சூர் அலிகான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுபார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சின்னத்தை கேட்டுப்பெறுவதற்காக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மன்சூர் அலிகான் வந்தார். அப்போது அவர் கூறுகையில், “எங்கே சென்றாலும் பணம் வாங்கினீர்களா என வேண்டுமென்றே கேட்கவைத்து, என்னை சோர்வடையச் செய்தனர். என்னை இங்கிருந்து அனுப்ப திட்டம் போட்டனர். தேர்தல் பணிமனைக்கு இடம் கிடைக்கவிடாமல் தடுத்தனர். மேலும், தேர்தல் பிரச்சார வாகனத்துக்கான அனுமதி அளிக்க தாமதிக்கின்றனர்.
என்னுடைய மகள் வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கி முடித்த பிறகு திரும்புங்கள் என்று சொன்னார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. இப்போது மக்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டேன். அதைவிட்டுக்கொடுக்க மாட்டேன். தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். தொண்டாமுத்தூர் தொகுதியில் விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது தென்னை மரங்கள். எனவே, தென்னந்தோப்பு சின்னம் கேட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.