
67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2013ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சிறந்த தமிழ் படத்திற்கான விருது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கும், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப்பெற்ற விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறப்பு தேசிய விருது, அந்த படத்திற்கு சிறப்பாக ஒலிப்பதிவு செய்ததற்காக ரசூல் பூக்குட்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆஸ்கர் விருதுவரை சென்ற பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு தற்போது மத்திய அரசு இரண்டு விருதுகளை அறிவித்துள்ளதால், நடிகர் பார்த்திபன் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.