
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும்,'ப்ளூ சட்டை' மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக 'ப்ளூ சட்டை' மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.
ப்ளூ சட்டை மாறன் வலிமை விமர்சனம்:
சமீபத்தில், ப்ளூ சட்டை மாறன் அஜித் நடித்த வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்திருந்தார். படத்தை தாண்டி அஜித்தை உருவ கேலி செய்தும் விமர்சித்திருந்தார். இதனால், சினம் கொண்ட அஜித் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தனர். இதற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருந்தும் அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை விமர்சித்து ட்வீட் போட்டு வந்தார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் :
அந்த வரிசையில், தற்போது வரும் ஏப்ரல் 13 ம் தேதி நெல்சன் இயக்கத்தில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. நடிகர் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் கவனிக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு தளபதிகளின் சந்திப்பு:
இந்நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து, இரு தளபதிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி கொண்டனர். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
பீஸ்ட் படம் ரிலீஸ் ஆக சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஜய்யின் இந்த சந்திப்பு மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. சிலர் இந்த சந்திப்பு திட்டமிட்ட மிட்ட ஒன்றா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பு வருகின்றனர். மேலும், விஜய் புதுவை முதலமைச்சரை சந்தித்த நிலையில் புதுச்சேரியில் மட்டும் பீஸ்ட் படத்திற்கு மூன்று மடங்கு கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
விஜய்யை சீண்டும் ப்ளூ சட்டை:
இந்நிலையில், தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விஜய்யை தனது பாணியில் விமர்சித்து இருக்கிறார். ''தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? - தமிழக மக்கள் கேள்வி'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.