Aishwarya: விவாகரத்திற்கு பிறகு டயட் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...வெறித்தனமாக ஒர்கவுட் வீடியோ...

Published : Apr 08, 2022, 10:46 AM ISTUpdated : Apr 08, 2022, 05:03 PM IST
Aishwarya: விவாகரத்திற்கு பிறகு டயட் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...வெறித்தனமாக ஒர்கவுட் வீடியோ...

சுருக்கம்

Aishwarya Rajinikanth video: தனுஷ் -தம்பதியினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவிப்பிற்கு பின், இருவரும் அவர் அவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

தனுஷ் -தம்பதியினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவிப்பிற்கு பின்,  இருவரும் அவர் அவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா பாலிவுட்டிலும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து:

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.

இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா:

இதையடுத்து,  தங்களது விவாகரத்து குறித்து எந்த முடிவும் எடுக்காமல், இருவரும் தங்களுடைய திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது, தங்களுடைய இரு மகன்கள்  யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து  வருகிறார்கள். 

சமீபத்தில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜா கச்சேரியில் கலந்துகொண்டார். இதேபோன்று,  ஐஸ்வர்யாவும் தனது மகன்கள் இருவரும் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்து, உருக்கமான கேப்ஷனையும் பதிவிட்டார். 

வெறித்தனமாக ஒர்கவுட் வீடியோ:

இதையடுத்து, விவரத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும், ஐஸ்வர்யா தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் மூலம் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.  அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

மேலும் படிக்க ....AK 61ல் புது கெட்டப் இல்லையா? மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?