
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னர் ஆகினர்.
சமையல் நிகழ்ச்சியான இது மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள கோமாளிகள் தான். இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பரத், குரேஷி, அதிர்ச்சி அருண் ஆகியோர் கோமாளிகளாக இடம்பெற்று உள்ளனர். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர்.
வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், குக்குகள் தான் கோமாளிகளை தேர்ந்தெடுப்பர். ஆனால் இந்த வார நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் வைத்த நடுவர்கள், கோமாளிகள் தான் குக்குகளை தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தனர். அதற்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன்மூலம் இந்த செலக்ஷன் பிராசஸ் நடந்தது. இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் குக்குகளும், கோமாளிகளும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிகழ்ச்சி வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Legend movie : லெஜண்ட் சரவணன் உடன் கவர்ச்சி ததும்ப குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்... வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.