Vijay fans: பீஸ்ட் படம் சிக்கல்...சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி...

Published : Apr 07, 2022, 04:39 PM IST
Vijay fans: பீஸ்ட் படம் சிக்கல்...சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி...

சுருக்கம்

Vijay fans: பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி தொடர்பான பிரச்சனையில், கடலூரில் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு, புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை முன்பதிவு தொடங்கிய தியேட்டர்களில் அதிக அளவில் டிக்கெட்டுகளை விற்று தீர்ந்து இருக்கின்றன.  

பீஸ்ட் முன்பதிவு:

நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஷான் டாம் சாக்கோ வில்லனாக நடித்துள்ளனர். இது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. மேலும், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று,  கடலூரில் நகர் பகுதியில் அமைந்துள்ள நான்கு திரையரங்கிலும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்படுகிறது. 

விஜய் ரசிர்களின் மீது தடியடி:

இந்நிலையில், கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில், பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தததால், அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர்.


மேலும் படிக்க ....Ajith: தல டக்கரு டோய்! அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்! படப்பிடிப்பு எங்கு தெரியுமா?


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்