
விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின், படப்பிடிப்பு பூஜை வீடியோவை இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார். தற்போது, இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
நடிகை ராஷ்மிகா:
தெலுங்கு திரையுலகில், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா. இதனை தொடர்ந்து, ராஷ்மிகா ஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டது.
இதையடுத்து, ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, நாகார்ஜுனா, நானி, மகேஷ்பாபு, நிதின் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர ஹீரோயினாக உயர்ந்தார்.
புஷ்பா படத்தின் வெற்றி:
இதையடுத்து அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக, ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம், இவரை பான் இந்தியா நடிகையாக உயர்த்தியது. இந்த படத்தில் வெளியான ஓ சாமியோ பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. இவரது நடிப்புக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் பிறமொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில், கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். இருப்பினும், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.
விஜய்யின் தீவிர ரசிகை ராஷ்மிகா.:
புஸ்பா படத்தில் வெற்றிக்கு பிறகு, மீண்டும் கோலிவுட்டில் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக தடம் பதித்துள்ளார் ராஷ்மிகா. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாக இருக்கும், திரைப்படம் தளபதி 66. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.
இதன் பூஜை சென்னையில் உள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், விஜய், ராஷ்மிகா, வம்சி, சரத்குமார், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தளபதி 66 பூஜை வீடியோ:
நடிகை ராஷ்மிகா, விஜய் ரசிகை என்பதால் விஜய்யை நேரில் பார்த்ததும் அவரது முகத்தில் வந்த ரியாக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாகி இணையத்தை கலக்கியது. தற்போது, அந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது விஜயை பார்த்த ராஷ்மிகாவின் ரியாக்ஷனை நீங்களே வீடியோவில் பாருங்க..