
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அனீஷ் மேனன். இவர் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ், ஒரு அடார் லவ், லூசிபர், திரிஷ்யம் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அனீஷ் மேனன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது: சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது, குறிப்பாக மோனோ ஆக்ட் என்றால் எனக்கு மிகவும் பிரியம். இதற்காக அனீஷ் மேனனின் பயிற்சி வகுப்புக்கு சென்று மோனோ ஆக்ட் பயின்று வந்தேன்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே என்னிடமும் நல்ல அன்பு காட்டுவார். அடிக்கடி எனது கன்னங்களை தடவுவார் . பின்னர் என்மீது அதிக சுதந்திரம் எடுக்க ஆரம்பித்த அவர், பொசிஷன் திருத்தம் எனக்கூறி என் அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார். இதெல்லாம் பயிற்சியின் ஒரு பகுதி எனக்கூறி என் பெற்றோரையும் நம்ப வைத்தார்.
ஒரு கட்டத்தில் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட அவர் எனது உதட்டைக் கடித்து முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது எனக்கு பயமும் அழுகையும் வந்தது. இதையடுத்து நடிப்பு பயிற்சி வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறி விட்டேன்.
என்னைப்போல் ஏராளமான பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். வீட்டில் போதிய ஆதரவு கிடைக்காததால் இந்த விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு பல வருடங்கள் ஆனது. அவரால் மற்ற சிறுமிகளும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். என்னைப் போன்று ஒருவர் வெளிப்படையாக பேசினால் தான் மற்றவர்களுக்கு தைரியம் வரும் என்பது என் நம்பிக்கை”. இவ்வாறு அந்த பெண் கூறி உள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Cook With Comali 3 : ‘குக் வித் கோமாளி 3’ல் முதல்முறையாக நிகழ்ந்த அதிரடி மாற்றம்! புரோமோ பார்த்து ஷாக் ஆன fans
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.