
திரையுலகில் நடிகராக விரும்பும் மாடல்களின் ஷாட் ரூட்டாக அமைந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சிலர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கை பற்றி நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது மாடலும், யாஷிகாவின் முன்னாள் காதலருமான நிரூப் இணைந்துள்ளார். இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாக, அவரது ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை நிரூப்பிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” என்கிற படத்தில் தான் நிரூப் அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த S. P. ஹோசிமின், பரத் நடித்த பிப்ரவரி 14, சாந்தனு பாக்யராஜ், சத்யராஜ் நடிப்பில்வெளியான 'ஆயிரம் விளக்கு' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
இவரின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் "சுமோ" விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். "BIGBOSS" புகழ் நிரூப் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஏழு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
மேலும் செய்திகள்: IMDB தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கிய 'விக்ரம்'... டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட் இதோ..!
இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் , மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மைம் கோபி, மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.பிரமாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில் FANTASY COMEDY படமாக இப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2' படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.