Biggboss: தெரியாமல் செஞ்சிட்டேன்..! வாண்டடாக சிக்கிய குயின்சியை... ஓட ஓட விட்டு.. வச்சு செய்த பிக்பாஸ்!

Published : Nov 24, 2022, 07:40 PM IST
Biggboss: தெரியாமல் செஞ்சிட்டேன்..! வாண்டடாக சிக்கிய குயின்சியை... ஓட ஓட விட்டு.. வச்சு செய்த பிக்பாஸ்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது மிகவும் பரபரப்பான டாஸ்கால்... அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வாண்டடாக சிக்கிய குயின்சிக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார் பிக்பாஸ் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம், போட்டியாளர்கள் நீதிமன்றம் டாஸ்க்கில், நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும் மாறி,  தினம் தோறும்...  பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சில பிரச்சனைகளை நீதிமன்றத்தில் எடுத்து வந்து வாதாடி வருகிறார்கள். வழக்கு தொடர்ந்தவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் வழக்றிஞராக மாறி வாதாடி வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமன் இருவரும், நிஜமாகவே கோர்ட்டில் வாதாடுவது போல் வாதாடியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

அந்த வகையில் இன்று குயின்சி மற்றும் கதிரவன் இடையே மிகவும் காரஞ்சாரமான விவாதங்கள் நடந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த பிரச்சனைக்கு நடுவே செம்ம டென்சன் ஆன குயின்சி பிக்பாஸ் வீட்டில் உள்ள அழகிய கொக்கு பொம்மை ஒன்றை உடைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து தெரியாமல் தான் பொம்மையை உடைத்தேன் என பிக்பாஸ்ஸிடம்  கூற, பிக்பாஸ் மிகவும் வித்தியாசமான தண்டனை கொடுக்கிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு கேமரா முன் சென்று தெரியாமல் கொக்கு பொம்மையை உடைத்து விட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்.

Samantha: சமந்தா உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறதா? எங்கு இருக்கிறார்..! வெளியான உண்மை!

இதனை குயின்சி சரியாக செய்கிறாரா? என்பதை சோதனை செய்ய மைனாவையும் நியமிக்கிறார். இதை அடுத்து குவின்சியும் ஒவ்வொரு கேமராவிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கேமராவிடமும் சென்று ஓடி ஓடி குயின்சி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு மன்னிப்பை யாரிடமும் கேட்கவில்லை என வருத்தமாக கூறுவதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hansika Motwani: கல்யாணம் நெருங்கும் நேரத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஹன்சிகா! அதகள ஹாட் போட்டோஸ்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரெடியா மாமே... அதகளமாக தயாராகும் அஜித்தின் கார் ரேஸ் ஆவணப்படம் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
ரஜினியின் தலைவர் 173 பட இயக்குநர் மீண்டும் மாற்றம்... பார்க்கிங் பட டைரக்டருக்கு பதில் இவரா?