உலக நாயகன் கமல் ஹாசன், உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் நேற்று திடீர் என உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹைதராபாத் சென்று திரும்பிய அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதை அடுத்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து நம்மவருக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் உடல் நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.. "ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் 23.11. 2022 அன்று லேசான காச்சல் இருமல் மற்றும் சளிபிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நன்கு குணமடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில், டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் ஓரிரு நாட்கள், நடிகர் கமலஹாசன் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
எனவே இந்த வாரம் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில்... விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.