உரிய அனுமதி இன்றி, 5 யானைகளை வைத்து... படப்பிடிப்பை நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தற்போது சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் விதிகளை மீறும் விதமாக உரிய அனுமதி இன்றி, யானைகளை வைத்து 'வாரிசு' திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் வெளியான போது, நேற்று பிரபல தனியார் நியூஸ் தொலைக்காட்சி இது குறித்து செய்தி சேகரிக்க இவிபி ஃபிலிம் சிட்டி அருகே சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது படப்பிடிப்பில் இருந்து வெளியே வருபவர்களிடம் யானை பயன்படுத்தப்படுகிறதா என உறுதி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து வாரிசு பட குழுவினருக்கு தகவல் தெரிய வர பாக்குழுவினருக்கும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் நடுவே... பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து ஒரு கும்பல் செய்தியாளர்களை தாக்கியதோடு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவர்களின் கேரமா, போன்ற பொருட்களை பறித்து கொண்டதோடு காருக்குள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
மேலும் இந்த தனியார் தொலைக்காட்சி 'வாரிசு' படத்தை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்ததாக சில தகவல் வெளியான நிலையில், அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது இது முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது. ஆகவும் பின்னர் வாரிசு படக்குழுவை சேர்ந்தவர்கள் அவர்களிடமிருந்து பறித்து வைத்திருந்த கேமரா போன்ற சில பொருட்களை ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் உடனடியாக ... சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடத்தப்பட்ட செய்தியாளர்களை மீட்டதோடு, செய்தியாளர்களை தாக்கிய மூன்று பேர் மீது, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்... உரிய தொலைக்காட்சி நிறுவனமும் இந்த சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்திருந்தது.
'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!
இந்நிலையில்... விஜயின் வாரிசு பட குழுவிற்கு விலங்கு நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு பட குழுவினர் விலங்கு நல வாரியத்திடம் உரிய அனுமதி பெறாமல், 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் இது சட்டப்படி குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்கு நல வாரியத்திடம் முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதற்காக, நோட்டீஸ் அனுப்பட்டுள்ள நிலையில், படக்குழுவினர் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.