திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை என நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை என நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்டி திரைப்படம் வரும் டிச.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் தொடர்பாக அப்படக்குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது. தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது. திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் கண்டெண்ட் எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க: முக்கிய இடங்களில் வாரிசு படத்தின் வெளியீடு உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
undefined
திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுகிறோம் என்றார். மேலும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, அந்த புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்கள் கதை எழுதும்போது நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், fitness தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டேன். ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே இந்த புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டார். உடலை கட்டுருதியாக பேணுவதை பெண்கள் சமூக வலைதளங்களில் இடும்போது பாராட்டுபவர்கள். ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கார் விஷயத்தில் விதிகளை மீறிய விஜய்! அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு..!
இதைத் தொடர்ந்து ரெட்ஜெய்ண்ட் நிறுவனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள விஷ்ணு விஷால், நாங்கள் கேட்பதால்தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள். எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை எனக்காக அவர்கள் வெளியிட்டு கொடுத்திருந்தார்கள். எனவே அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை. படங்கள் மீது உதயநிதி ஆர்வம் கொண்டவர் என்பதும் அவர் சினிமாவை காதலிப்பவர் என்று தெரிவித்தார்.