ரம்யா பாண்டியனை கடுப்பேற்றி..வெளியேறவைத்த ஹவுஸ்மேட்ஸ்..என்ன இப்படி பண்ணிட்டிங்க?

Kanmani P   | Asianet News
Published : Mar 22, 2022, 02:02 PM IST
ரம்யா பாண்டியனை கடுப்பேற்றி..வெளியேறவைத்த ஹவுஸ்மேட்ஸ்..என்ன இப்படி பண்ணிட்டிங்க?

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்துள்ள ரம்யா பாண்டியனை போட்டியாளர்கள் வெறுப்பேற்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஓடிடிக்கு வந்த பிக்பாஸ் :

விஜய் டிவியை தொடர்ந்து பிக்பாஸ் அல்மேட் என்னும் பெயரில் தற்போது ஓடிடியில்  பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை முதல் மூன்று வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

கமலுக்கு பதில் சிம்பு 

கமல் படப்பிடிப்பு பணிகள் காரணாமாக விலகியதால், அவருக்கு பதில் கடந்த 3 வாரங்களாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் தான் சிம்பு இங்கு களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு ...Anchor DD : கர்ப்பமாக இருக்கிறாரா டிடி?.... வளைகாப்பு போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - பின்னணி என்ன?
 

கடந்த வார எவிக்‌ஷன் லிஸ்ட்

சென்ற வாரம் எலிமினேஷன் லிஸ்டில், ஜுலி, தாமரை, நிரூப், அனிதா, சதீஷ், சுருதி ஆகியோர் உள்ளனர். இதில் அதிக வாக்குகளைப் பெற்று ஜூலி முதல் இடத்தில் உள்ளார். தாமரை இரண்டாவது இடத்திலும், நிரூப் மூன்றாவது இடத்திலும், சதீஷ் நான்காவது இடத்திலும் இருந்தனர். கடைசி இரண்டு இடத்தில் அனிதா மற்றும் சுருதி பகிர்ந்துகொண்டனர். இதில் அனிதா வெளியேற்றப்பட்டார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி :

வனிதா திடீரென சொல்லாமல் கொள்ளாமல் திடீரென கலவரம் செய்து வெளியேறினார். இதையடுத்து ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்ட்டு மற்றும் கே.பி.ஒய் சதீஷ் ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வெளியானார். இதையடுத்து ஒரு பெண் போட்டியாளர் உள் நுழையவுள்ளது குறித்த தகவல் பரவியது. ஓவியா அல்லது லாஸ்லியா வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரம்யா பாண்டியன் பாண்டியன் என்ட்ரி கொடுத்தார்.
 

மேலும் செய்திகளுக்கு ...Aishwarya Rajinikanth :பிரிந்தாலும் பாசம் குறையல! தனுஷ் - ஐஸ்வர்யாவின் அன்பைப்பார்த்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள்

டாஸ்கில் மோதல் :

தற்போது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. அதன்படி ஒரு வேனுக்குள் அனைவரும் இருக்கின்றனர். இதில் இறுதி வரை இருப்பவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். அப்போது ஜூலி, ஸ்ருதி இருவரும் மாறி மாறி ரம்யாவை கடுமையாக கடுப்பேத்துகின்றனர். இதனால் ரம்யா பாண்டியன் டாஸ்கில் இருந்து வெளியேறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!