
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிர்மல் குமார் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இப்படம் 2 மணிநேரம் 35 நிமிடம் ஓடக்கூடியது எனவும் நேற்று அப்டேட் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Manmadha Leelai : லிப்கிஸ்... அடல்ட் காமெடியுடன் வைரலாகும் மன்மதலீலை டிரைலர்- வெங்கட் பிரபு படமா இது?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.