Manmadha Leelai : லிப்கிஸ்... அடல்ட் காமெடியுடன் வைரலாகும் மன்மதலீலை டிரைலர்- வெங்கட் பிரபு படமா இது?

By Asianet Tamil cinemaFirst Published Mar 22, 2022, 10:37 AM IST
Highlights

Manmadha Leelai : வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். 

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு, ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

நட்பை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. பின்னர் சரோஜா, கோவா என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, கடந்த 2011-ம் ஆண்டு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

Latest Videos

இதன்பின் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய பிரியாணி, சூர்யா நடித்த மாஸ் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால், மீண்டும் சென்னை 28 படக்குழுவினருடன் கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, வெற்றிபாதைக்கு திரும்பினார். 

அதனைத் தொடர்ந்து 5 அண்டுகள் இடைவெளிக்கு பின் சிம்புவை வைத்து மாநாடு என்கிற படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் கடந்தாண்டு வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது ‘மன்மதலீலை’ திரைப்படம் உருவாகி உள்ளது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமாக தயாராகி உள்ள இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கடந்த மாதம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீசாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. லிப்கிஸ், இரட்டை அர்த்த வசனங்கள் என அடல்ட் காமெடி படத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள், இது வெங்கட் பிரபு படம் தானா என ஷாக் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Aishwarya Rajinikanth :பிரிந்தாலும் பாசம் குறையல! தனுஷ் - ஐஸ்வர்யாவின் அன்பைப்பார்த்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள்

click me!