Aishwarya Rajinikanth :பிரிந்தாலும் பாசம் குறையல! தனுஷ் - ஐஸ்வர்யாவின் அன்பைப்பார்த்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள்

By Asianet Tamil cinema  |  First Published Mar 22, 2022, 9:45 AM IST

Aishwarya Rajinikanth : பிரிந்த பின்னரும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களது மகன்கள் மீது காட்டும் அன்பைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.


பாசம் குறையல

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்த பின், பெரும்பாலானோர் சொன்னது, குழந்தைகளுக்காக சேர்ந்து வாழலாமே என்பது தான். இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரிந்த பின்னரும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களது மகன்கள் மீது காட்டும் அன்பைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.

Tap to resize

Latest Videos

தாலாட்டு பாடிய தனுஷ்

நடிகர் தனுஷ் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இளையராஜாவின் இசைக் கச்சேரியில் தன் மகன்களுடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையில் ஏறி நிலா அது வானத்து மேலே பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா உடன் இணைந்து பாடினார். அதன்பின்னர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று, தன் மகன்களுக்காக தான் எழுதிய தாலாட்டு பாடலை பாடி தன் அன்பை வெளிப்படுத்தினார். அந்த தாலாட்டு பாடலைக் கேட்ட ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

கவிதை எழுதிய ஐஸ்வர்யா

இந்நிலையில், மகன்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை எழுதி உள்ளார். அதுமட்டுமின்றி மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா தனக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து பாச மழை பொழிந்துள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “அன்று கருவில் என்னை உதைத்த நீ... இன்று வளர்ந்து என்னை முத்தமிடுவதை நான் நேசிக்கிறேன். உங்களை எனக்கு மகன்களாக அளித்த கடவுளுக்கு நான் தினந்தோறும் நன்றி சொல்வேன். அந்த நன்றிக்கடனை திருப்பி செலுத்த ஒரே வழி பிரார்த்தனை தான். இதுதான் அன்பு, இதனை அளவிட முடியாது. இதனை நான் என்றென்றும் பொக்கிஷமாய் பாதுகாப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Gentleman 2 : அட... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஜென்டில்மேன் 2-வில் ஹீரோயினாக கமிட் ஆன நயன்தாரா?

click me!