Aishwarya Rajinikanth :இனி நான் ஐஸ்வர்யா தனுஷ் இல்ல! பெயரை நீக்கி அதிரடி காட்டிய ரஜினி மகள்- ஷாக் ஆன ரசிகர்கள்

By Asianet Tamil cinema  |  First Published Mar 22, 2022, 8:09 AM IST

Aishwarya Rajinikanth : தனுஷுடன் சேரும் மனநிலையில் தான் இல்லை என்பதை கூறும் விதமாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி அதிரடி காட்டி உள்ளார் ஐஸ்வர்யா.


தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு

நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்தார். நடிகர் தனுஷை விட்டு பிரிந்து வாழப்போவதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐஸ்வர்யா, இந்த அறிவிப்புக்கு பின்னர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வந்தார்.

Tap to resize

Latest Videos

இதனால் நிம்மதி அடைந்த ரசிகர்கள், விரைவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து விடுவார்கள் என கருதி வந்தனர். மேலும் இரண்டு மகன்களுக்காக இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்கிற குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன. இதைப்பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருக்கின்றனர்.

தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா

இந்நிலையில், நேற்று ஐஸ்வர்யா செய்த செயல் தனுஷ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, நேற்று அதனை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி உள்ளார்.

இதன்மூலம் தனுஷுடன் சேரும் மனநிலையில் தான் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா. டுவிட்டரில் மட்டும் தனுஷின் பெயரை நீக்கி உள்ள ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் அவரது பெயரை நீக்கவில்லை. அதற்கான காரணம் தெரியாமல் தனுஷ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Priya Bhavani Shankar :முழுசா கவர் பண்ணியும் கவர்ச்சி குறையல... வைரலாகும் பிரியா பவானி சங்கரின் கிக்கான photos

click me!