Kajal Aggarwal : வயிற்றில் குழந்தையுடன் நடுக்காட்டில் காஜல் அகர்வால்..இருட்டுல போக வேண்டிய இடமா இது ?

Kanmani P   | Asianet News
Published : Mar 21, 2022, 09:40 PM IST
Kajal Aggarwal  : வயிற்றில் குழந்தையுடன் நடுக்காட்டில் காஜல் அகர்வால்..இருட்டுல போக வேண்டிய இடமா இது ?

சுருக்கம்

Kajal Agarwal : கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் நடுக்காட்டில் அதுவும் இரவில் விருந்து உண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பிரபல தென் இந்திய நாயகி :

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதோடு இத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

முன்னணி நாயகர்களுக்கு நாயகி :

தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்துள்ள காஜல் முன்னை நாயகர்களான நல்ல பார்த்துக்களை பெற்றார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்ட காஜல் :

படங்களில் பிஸியா வளையம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ரொமாண்டிக் புகைப்படங்கள் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்ளை குஷிப்படுத்தி வந்தது.

மேலும் செய்திகளுக்கு... ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய காஜல் அகர்வால்.. கர்ப்பமா இருக்கையில் இப்படி போஸ் கொடுக்கலாமா?

திருமணத்திற்கு பிறகும் படங்களில் காஜல் :

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமிட் ஆகி வந்தார் காஜல் அகர்வால். இவர் கமலின் இந்தியன் 2, பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியிருந்தார். இதில் ஹி சினாமிக வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து. அதோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்துள்ளார்.

படங்களில் இருந்து திடீர் விலகல் :

நல்ல பட வாய்ப்புகளை பெற்று வந்த காஜல். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அதோடு நல்ல பெயர் எடுத்து தரும் என எதிர்பார்க்கப்பட்ட கமல் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2வில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

காஜல் வீட்டில் விசேஷம் :

பின்னர் காஜல் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூனியர் வரவிருப்பதை அறிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதோடு சமீபத்தில் காஜலின் வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலானது.

மேலும் செய்திகளுக்கு...Kajal aggarwal: வயிற்றில் நிறை மாத குழந்தையுடன் இருக்கும் காஜல் அகர்வால்...கையில் நாயுடன் அடித்த லூட்டி...

நடுக்காட்டில் காஜல் :

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் மாடர்ன் போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள காஜல் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ராஜஸ்தானில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ள காஜல் அங்கு நடுக்காட்டில் விருந்துண்ணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!