Gentleman 2 : ஜென்டில்மேன் முதல் பாகத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் தான் அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
ஷங்கரின் ஜென்டில்மேன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜென்டில்மேன். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்த இப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் கட்டியிருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அவர் இசையமைத்த பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. இதுதவிர, இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் காம்பினேஷனில் இடம்பெறும் கலக்கல் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
தயாராகிறது ஜென்டில்மேன் 2-ம் பாகம்
கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை வாரிக் குவித்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது தயாராக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
மேலும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர், நடிகர் அர்ஜுன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதையும் அவர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். அவர்களுக்கு பதில் புதிய கூட்டணியில் தயாராக உள்ள இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் திட்டமிட்டுள்ளார்.
ஹீரோயினாக நயன்தாரா
முதலாவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட்டை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது படக்குழு. அதன்படி பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஜென்டில்மேன் 2 படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Aishwarya Rajinikanth :இனி நான் ஐஸ்வர்யா தனுஷ் இல்ல! பெயரை நீக்கி அதிரடி காட்டிய ரஜினி மகள்- ஷாக் ஆன ரசிகர்கள்