
சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது மன்மதலீலை படத்தை இயக்கி உள்ளார். அசோக் செல்வன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இப்படத்துக்கு இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அசோக் செல்வன் பேசியதாவது: “வெங்கட் பிரபு அவர்களுடைய படங்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தற்போது அவருடனே பணியாற்றியது கனவு நனவானது போல் உள்ளது. மன்மதலீலை படத்தை வேகமாக எடுத்து முடித்துவிட்டோர். கொஞ்ச நாள் தான் ஷூட் பண்ணினோம்.
அதுக்கு நடுவுல எனக்கு கொரோனாலாம் வந்தது. அந்த டைம்ல தான் அந்த லிப்கிஸ் சீன்லாம் எடுத்தாங்க. கொரோனா வந்த டைம்ல கிஸ் சீன் நடிச்சாலுமே ஹீரோயின்களுக்கு எதுவும் ஆகல. டீசர் ரிலீஸ் ஆனப்போ ஏன் இந்த மாதிரி படம் பண்றீங்கனு கேட்டாங்க. ஆனா எனக்கு கதை பிடித்திருந்தது. இதில் எந்தவிதமான தவறான விஷயங்களும் இல்ல.
டிரைலர்ல சொன்ன மாதிரி ‘எல்லா ஆண்களும் ராமர்களே மாட்டிக்கொள்ளும் வரை... இப்படிக்கு மாட்டிக்கொண்டவர்’ அத வச்சு தன் இந்த படம் இருக்கும். இது முழுக்க முழுக்க காமெடி படம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த வெங்கட் பிரபுவுக்கு நன்றி”. இவ்வாறு அசோக் செல்வன் பேசினார்.
இதையும் படியுங்கள்... Beast Release Date : வசூல் வேட்டைக்கு தயாரான விஜய்... அனல் பறக்கும் போஸ்டருடன் வெளியானது பீஸ்ட் ரிலீஸ் தேதி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.