அப்பாவிற்கு 100 வயது! தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.. சினேகன் நெகிழ்ச்சி!

Published : Jul 17, 2024, 12:40 PM ISTUpdated : Jul 17, 2024, 01:17 PM IST
அப்பாவிற்கு 100 வயது! தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.. சினேகன் நெகிழ்ச்சி!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது முக்கிய செய்தியை பகிர்ந்துள்ளார் கவிஞர் சினேகன்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு சீசன்களுக்குப் பிறகும், முதல் சீசன் இன்னும் பல ரசிகர்களுக்கு சிறந்த சீசன். இந்த சீசனில் ஆரவ் வென்றார். சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

சினேகன் அதற்கு முன் பல படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்த பாடல்கள் அனைத்தும் இவரே எழுதியது பலருக்கும் தெரிய வந்தது என்றே சொல்லலாம். பிக்பாஸில் இருந்தபோது, ​​அவர் தனது சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து, அவரை கட்டிப்பிடி மருத்துவர் என்ற பட்டத்தை பெற்றார்.

சினேகன் தன்னை விட 16 வயது குறைந்த சீரியல் நடிகை கன்னிகாவை மணந்து சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கினார். இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னிகாவை திருமணம் செய்ததில் இருந்தே, சினேகன் 10 வயது இளைஞனாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். ஸ்டைலிஷ் ஆன ட்ரெஸ், ட்ரெண்டி லுக் என அவ்வப்போது கலக்கி வரும் சினேகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், அப்பாவிற்கு 100 வயது என்று பதிவிட்டு சினேகன் தனது அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் சினேகன் அப்பா இன்னும் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் மூன்றாவது குழந்தைக்கு பிரமாண்டமாக நடந்த பெயர் சூட்டு விழா..! வைரலாகும் புகைப்படங்கள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!
அக்கா என்று கூட பார்க்கலயே: பாதகத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் போட்டுக் கொடுத்த சந்திரகலா!