Aromo Mani Death: விக்ரம் நடித்த காசி பட தயாரிப்பாளர் அரோமா மணி காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Published : Jul 16, 2024, 05:00 PM IST
Aromo Mani Death: விக்ரம் நடித்த காசி பட தயாரிப்பாளர் அரோமா மணி காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சுருக்கம்

பிரபல மலையாள பட தயாரிப்பாளர் அரோமா மணி, உடல்நல குறைவால் தன்னுடைய 84 வயதில் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான 'அரோமா' மணி தன்னுடைய 84 வயதில் காலமான தகவல் வெளியாகி, திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரோமா மணி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தநிலையில், திடீர் என ஏற்பாட்டை மூச்சி திணறலால் உயிரிழந்தார். இவரது உடல் திங்கள்கிழமை பாரத் பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

மகளுக்கு 500 சவரன் போட்ட நடிகை ராதா... தன்னுடைய திருமணத்தில் 200 சவரன் நகையோடு ஜொலிக்கிறார்! Unseen போட்டோஸ்!

மறைந்த தயாரிப்பாளர் அரோமே மணிக்கு, கிருஷ்ணம்மா என்கிற மனைவி இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். மேலும் இவருக்கு சுனில் குமார், சுனிதா சுப்ரமணியம் மற்றும் அனில் குமார் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மணியின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர்.

'இந்தியன் 2' படத்தில் விவேக்கின் டூப்பாக நடித்தது இந்த சன் டிவி சீரியல் நடிகரா? பலரும் அறிந்திடாத தகவல்!

இவர் 'துருவம்', 'கமிஷனர்', 'கள்ளன் பவித்ரன்', 'மிஸ்டர்' உள்ளிட்ட ஏராளமான மலையாள வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் மணி. தமிழிலும் நடிகர் விக்ரம் நடித்த 'காசி', முரளி நடித்த உன்னுடன், பிரபுவுடன் நடித்த அரங்கேற்ற வேலை போன்ற 50-திற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அதே போல் சுமார் 7 மலையாள படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்