Sarathkumar: வரலட்சுமி கணவர் மற்றும் குடும்பத்துடன் சரத்குமார் கொண்டாடிய 70-ஆவது பிறந்தநாள்! வைரலாகும் வீடியோ!

Published : Jul 16, 2024, 12:14 PM IST
Sarathkumar: வரலட்சுமி கணவர் மற்றும் குடும்பத்துடன் சரத்குமார் கொண்டாடிய 70-ஆவது பிறந்தநாள்! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

நடிகர் சரத்குமாரின் 70-ஆவது, பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக மாறியவர் தான் சரத்குமார். புதுதில்லியில் ஜூலை 14-ஆம் தேதி பிறந்த இவர், தன்னுடைய தந்தையை தொடர்ந்து ஒரு ரிப்போர்ட்டராக தன்னுடைய பணியை துவங்கினார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே, சாயாதேவி என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்ட இவர் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். 

நக்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, சாயாதேவியுடன் சரத்குமாருக்கு இருந்த திருமண உறவு முடிவுக்கு வந்ததது. சாயா தேவியுடன் வாழ்ந்த போது, பெரிதாக சரத்குமாருக்கு வசதி வாய்ப்பு இல்லை என்றாலும், பின்னர் இவர் நடித்த புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவரை சுப்ரீம் ஸ்டார் சரத்குமாராக மாற்றியது.

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது,  ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இவர்கள் இருவருக்கும் 2004-ஆம் ஆண்டு  ராகுல் என்கிற மகன் ஒருவரும் பிறந்தார்.

Kaithi 2: கைதி 2 படத்தில்... கார்த்தியுடன் கைகோர்க்க உள்ளது சூர்யா இல்ல! அவரையே மிஞ்சிய மாஸ் ஹீரோவாம்?

நடிகர் என்பதை தாண்டி, அரைசியலிலும் களமிறங்கினார். 1996ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த சரத்குமார் பின்பு 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்பு 2001ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அத்தேர்தலில் திமுகவின் எதிர்கட்சியான அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோதிலும் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.

2006இல் திரைப்பட வேலைகளை காரணம் காட்டி கட்சியில் இருந்து வெளியேறிய சரத்குமார். தனது தலைமையில் 2007-ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்கிற கட்சியை துவங்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இந்த ஆண்டு மக்களவை தேர்தலின் போது தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக கூறி, தன்னுடைய மனைவி ராதிகாவை தேர்தல் களத்தில் இறக்கினார். 

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்திகேயன்.. கிராமத்து கண்மணியாய் ஆர்த்தி! ரசிக்க வைக்கும் Throw Back வெட்டிங் போட்டோ

அரசியலிலும், சினிமாவிலும் தற்போது தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகர் சரத்குமார்... இந்த மாதம் தன்னுடைய மகள், வரலட்சுமிக்கு மிகப்பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்து அழகு பார்த்த நிலையில், ஜூலை 14-ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில், தன்னுடைய வீட்டிலேயே குடும்பத்துடன் பிறந்தநாள் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு