- Home
- Gallery
- கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்திகேயன்.. கிராமத்து கண்மணியாய் ஆர்த்தி! ரசிக்க வைக்கும் Throw Back வெட்டிங் போட்டோ
கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்திகேயன்.. கிராமத்து கண்மணியாய் ஆர்த்தி! ரசிக்க வைக்கும் Throw Back வெட்டிங் போட்டோ
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி ஜோடியின் த்ரோ பேக் வெட்டிங் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை, தனதாக்கி கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டு, சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றியபோதே, தன்னுடைய அம்மாவின் ஆசை படி, தாய் மாமாவின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு தான், சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் 'மெரினா' படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் 3 படத்திலும் தனுஷின் நண்பராக நடிக்க ஒப்பந்தமானார். நடிகராக மாறிய பின்னர் தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு மெருகேற்றிக்கொள்ள சிவகார்த்திகேயன் எடுத்த முயற்சிகள் தான் தற்போது இவரை 50 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் நடிகராக மாற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய மாமா மகளையே திருமணம் செய்து கொண்டாலும், ஆர்த்தி - சிவா இடையே உள்ள காதல், மிகவும் தனித்துவமான ஒன்று. குறிப்பாக இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்பதால், சிவகார்த்திகேயன் மீது அளவு கடந்த காதல் இருந்தாலும் ஆர்த்தி அதை எப்போதும்வார்திகளால் வெளிப்படுத்தியதே இல்லை. சிவகார்த்திகேயனின் பட விழாவில் இதை குறிப்பிட்டு சொல்லி 'ஐ லவ் யூ' என கூறி இருந்தார்.
சிவகார்த்திகேயனுக்கு தற்போது திருமணம் ஆகி ஆராதனா, குகன், மற்றும் பவன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அதிலும் குறிப்பாக மூன்றாவது குழந்தையான பவன் கடந்த மாதம் ஜூன் மாதம் தான் பிறந்தார்.
இன்று தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து தொடர்ந்து சிவகார்த்திகேயனின் த்ரோ பேக் வெட்டிங் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய திருமணத்தின் போது, கிளீன் ஷேவ் செய்து, மீசை இல்லாமல்... இருக்க ஆர்த்தி அதிகம் மேக்கப் இல்லாத முகத்துடன்.. கிராமத்து பெண்ணின் கலையான அழகுடன் ஜொலிக்கிறார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.